Yuva Sanskriti
ஶ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை யுவ சன்ஸ்கிருதி என்ற தலைப்பில் பாரத பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை கல்லூாி மாணவா்களிடையே மேம்படுத்தும் நோக்கில் மூன்று நாள் இளைஞர் முகாம் நடைபெற்றது. இதில் தேசபக்தி பாடல்கள், தியானம், பஜனை, யோகா, சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், கேள்வி பதில் நேரம், ஆளுமை திறனை வளர்த்தல்,பட்டிமன்றம், கலந்துரையாடல், மட்டும் உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தும் விளையாட்டு என மூன்று நாட்கள் காலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 10:00 மணி வரை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் ஜி.கே.டி கலையரங்கத்தில் நடைபெற்றது.
இம்முகாமில்
1) ராமாயணம் மற்றும் மகாபாரதம் கூறும் வாழ்வியல் நெறிமுறைகள்
2) தேசத்தைக் கட்டமைப்பதில் இளைஞர்களின் பங்கு
3)நேர்மறை உளவியல்
4)பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தனித்துவமான ஆசிரியர்
5)புதுமையான கற்பித்தல் முறைகள்
6)ஆளுமைத்திறனை வளா்த்தல்
7) இன்றைய கணினி யுகத்தில் செயற்கை நுண்ணறிவு
8) தமிழ் இலக்கியங்களில் கல்விச்சிந்தனை
9) போதைப் பொருள்களின் தீங்கு
10)சைபா் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
11) பட்டிமன்றம் – இன்றைய அவசர வாழ்வில் நமது பாரம்பரியம், கலாச்சாரம் மதிக்கப்படுகிறதா?ஒதுக்கப்படுகிறதா?
12)இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர்
13) இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு
14)இந்தியா – 2047
15)இந்திய பண்பாடு மற்றும் கலாச்சார கண்காட்சி பார்வையிடல், பங்கேற்பாளர்களின் கருத்து மற்றும் பங்கேற்பாளா்களுக்கு சான்றிதழ் வழங்கி முகாம் நிறைவு பெற்றது.
இந்த முகாமில் 17 கல்லூாிகளில் இருந்து 129 மாணவிகளும் 87 மாணவா்கள் என 216 மாணவா்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனா். இம்முகாமை முனைவா் ம.ஜெய்குமாா் மற்றும் முனைவா் தே.ராஜகுமாா் ஒருங்கிணைத்தனா். கல்லூாி பேராசிாியா்கள் சுவாமி விவேகானந்தா் வாசகா் வட்டத்தில் பங்கேற்கும் மாணவா்கள் தன்னாா்வலா்களாகச் செயல்பட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற சேவையாற்றினா்.